“போக்குவரத்துத்துறையின் வளர்ச்சிக்காக ரூ.13,560 கோடி ஒதுக்கீடு” – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்!

தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.13,560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசினார். அப்போது, “போக்குவரத்துத்துறையின் வளர்ச்சிக்காக தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.13,560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் செயல்திறன் இடைவெளியை ஈடுசெய்வதற்காகவும், பங்கு மூலதன உதவியாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மின்சார பேருந்துகளுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பொதுப்போக்குவரத்தையும், அதை நம்பி தினந்தோறும் பயணம் செய்யும் கோடிக்கணக்கான மக்களையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், முதலமைச்சருக்கு போக்குவரத்துத்துறை சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள், 317 பணிமனைகள் மூலம் 10,160 வழித்தடங்களில் 21,198 பேருந்துகளை இயக்கி வருவதாகவும், தினந்தோறும் சுமார் 2 கோடியே 12 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசு பொறுப்பேற்றது முதல் போக்குவரத்துத்துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக 749 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது இதற்கான மதிப்பு ரூ.516 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது..

அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இதுவரை 21 புதிய பேருந்து வழித்தடங்களும், 140 வழித்தட நீட்டிப்புகளும் பொதுமக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சாதனையாக சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திற்குட்பட்ட கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள தளக்கரை மற்றும் பாச்சாரி கிராமங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டு 14.06.2026 தேதி முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேனி மாவட்டம் குரங்கணி அருகே உள்ள பொட்டக்குடி கிராமத்திற்கும் கோரிக்கையின் அடிப்படையில் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என இதுவரை 2025 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு நடப்பு நிதியாண்டில் 1,000 புதிய குளிர்சாதன வசதிகள் கொண்ட மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார்..

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பெயரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என மாற்றி, தமிழ்நாட்டின் பெயரை பெருமையுடன் பேருந்துகளில் தாங்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தவெக அரசு தான். 98,000 ஓய்வுபெற்ற போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு ரூ.3,637 கோடி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்படுத்தியவர் முதலமைச்சர்.

சாலை போக்குவரத்துத்துறை சார்பில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், அனுமதிச்சீட்டு வழங்குதல், மோட்டார் வாகன வரி வசூல், வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டுவருகிறது. அதேபோல் சாலை பாதுகாப்பை உறுதி செய்தல், சாலை விபத்துகளை குறைத்தல் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.

2026 ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே 99 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

2025-26 முதல் 2026 செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 8,805,53 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு ரூ.4,579.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்புக்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துகளால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக எளிதாகக் கிடைக்கும் வகையில், ‘Anywhere Registration Licensing’ முறையை படிப்படியாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறும் வசதியும், புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் ஆர்.சி.யை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் லாரி போக்குவரத்துத்துறையில் முக்கிய மையங்களாக இருந்து வருகிறது, லாரி உரிமையாளர்களின் நலன் கருதி சேலம் மாநகருக்கு அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆத்தோ நகரம் அமைப்பது தொடர்பாக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்..
பொதுப்போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் ஆட்டோ ரிக்ஷாக்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் நோக்கிலும், ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிதிச்சுமை, பழைய பேருந்துகள், சேவை இடைவெளிகள் மற்றும் நிர்வாக சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை துறை சந்தித்து வந்தது அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையை வலுப்படுத்துதல், புதிய பேருந்துகளை அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பேருந்து சேவை ஏற்படுத்துதல், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குதல் மற்றும் தமிழ்நாட்டின் பொதுப்போக்குவரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு முதலமைச்சர் வழிகாட்டி வருகிறார்.

மேலும், தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியுமா, வேட்பாளர்கள் கிடைப்பார்களா, வெற்றி பெற முடியுமா என பல்வேறு பட்டிமன்றம் மூலம் பேசினார்கள் வைத்தார்கள்,ஆனால் தங்கள் தலைவர் அவற்றை முறியடித்து 1 கோடியே 75 லட்சம் வாக்குகளைப் பெற்று தமிழக அரசியல் வரலாற்றில் புரட்டிப்போட்டவர் எங்கள் முதலமைச்சர்.

அரசியல் மற்றும் கட்சிக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, தாம் வகிக்கும் அமைச்சர் என்ற பொறுப்பையும் கடந்து, இந்த மண்ணின் வரலாற்றையும் அதற்காக உழைத்தவர்களின் தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் சில கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

ஆங்கிலேயர்களையே அஞ்ச வைத்த கொங்கு நாட்டின் மாவீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் சங்ககிரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவிடம் மற்றும் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மாவீரர் தீரன் சின்னமலைக்கு திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்றும், அவரது பிறப்பு, விடுதலைப் போராட்டப் பங்களிப்பு, வீர வரலாறு மற்றும் தியாகத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி மற்றும் வரலாற்று அரங்கம் அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்.

முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் தியாகம், உழைப்பு மற்றும் அரசியல் பயணத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்டத்தில் உரிய முறையில் பாடமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கோரிக்கை முன்வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.