நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் , பல்வேறு கட்சியினர் கருத்து.

தமிழ்நாடு அரசு இயற்றிய நீட் மசோதாவை ஆளுநர் ஆர் . என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பாமக இளைஞர் அணித் தலைவர்…

தமிழ்நாடு அரசு இயற்றிய நீட் மசோதாவை ஆளுநர் ஆர் . என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் “நீட் விலக்கு சட்டத்தைத் திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை என . சட்டப்பேரவையை அவசரமாகக் கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றாமல், சட்டப்பூர்வமாக அணுகி நீட்டிலிருந்து விலக்கு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாகவும், சட்டப்பூர்வமாக அணுகி நீட்டிலிருந்து விலக்கு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க உறுப்பினரும், வழக்கறிஞருமான பி. வில்சன் “நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனவும், இது அதிகார துஷ்பிரயோகம் ” என்று தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வில், அதிகம் பேர் தேர்ச்சி பெறும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. என்றும் மத்திய அரசு மீதான எதிர்ப்பை உருவாக்க நீட் விவகாரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் அரசியல் செய்து வருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.