மணல் கான்ட்ராக்ட் வாங்கி தருவதில் ஏற்பட்ட மோசடி காரணமாக தியாகராய நகரில் தொழில் அதிபரைக் கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 41-வயதான சரவணனுக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த 41-வயதான ஆரோக்கியராஜ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூபாய் 5 கோடி கொடுத்ததாகவும், இந்த ரூபாய் 5 கோடியை மணல் குவாரி ஏலம் எடுக்கச் சரவணனிடம் ஆரோக்கியராஜ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சரவணனிடம் கொடுத்த ரூபாய் 5 கோடியைத் திருப்பி தராமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ் ஜெயில் வார்டன், ஐடி ஊழியர்கள், நண்பர்கள் என 6 பேர் கொண்ட கும்பலுடன் அர்ச்சுனர் காரில் தியாகராய நகரில் உள்ள சரவணன் வீட்டிற்குச் சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி சரவணனை அவருடைய இரண்டு சொகுசு காரில் கடத்தி சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் வாக்கி டாக்கி மூலம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் அலார்ட் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, பள்ளிகாரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா தலைமையிலான குழுவினர் ஓஎம்ஆர் சாலையில் கடத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களையும், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மாமல்லபுரம் அருகே ஒரு காரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் கடத்தப்பட்டவரையும் கடத்திய ஜெயில் வார்டன், இரு ஐடி ஊழியர்கள், பணம் கொடுத்தவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சரவணகுமார் ஆரோக்கியராஜுக்குத் தேனியில் மணல் கான்ட்ராக்ட் எடுத்துத் தருவதாகக் கூறி உறுதி அளித்ததாகவும், அதற்காக ஆரோக்கியராஜ், சரவணகுமாருக்கு 5 கோடி ரூபாய் பணம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘‘மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி’ – தி லெஜண்ட் சரவணன் ட்வீட்’
தொடர்ந்து மணல் கான்ட்ராக்ட் வாங்கி கொடுக்காமலும் பணத்தையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்ததால் இது தொடர்பாகப் பலமுறை சரவணகுமாரிடம் ஆரோக்கியராஜ் கேட்டு இருக்கிறார். ஆனால், சரவணகுமார் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், ஆரோக்கிய ராஜ் தனது ஆட்களுடன் வந்து சரவணகுமாரை தன்னுடைய காரில் கடத்தி சென்றதும், மேலும் சரவணகுமாருக்குச் சொந்தமான பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார் மற்றும் வீட்டிலிருந்த 45 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று வாட்ச்சுக்கள் விலை உயர்ந்த காலணிகள் மற்றும் ஷூக்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதையும் போலீசார் மீட்டு உள்ளனர்.








