தி லெஜண்ட் திரைப்படம் மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளதாக தி லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான இவர் திரைத்துறையில் கால் பதித்துள்ள முதல் படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை ஜே.டி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மறைந்த விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
லெஜண்ட் சரவணாவே பிரமாண்டமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் மோசன் போஸ்டர், ட்ரெய்லர் வெளியான போதே சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தி கவனம் ஈர்த்திருந்தார் சரவணன்.
அண்மைச் செய்தி: ‘‘ரயில்வே துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது’ – மத்திய இணை அமைச்சர் முரளிதரன்’
https://twitter.com/yoursthelegend/status/1561220141056004096?s=12&t=qKrx-Xqtj2LeDbBzpFMOKw
இந்த படத்தில் விஞ்ஞானியாகச் சரவணன் நடித்துள்ளார். தி லெஜண்ட் படத்தைத் தமிழ்நாடு முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிட்டார். உலக அளவில் தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்தது. மாஸ் ஆக்ஷன் கமெர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேசமயம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை ரூ.12.5 கோடிக்கும் மேல் தி லெஜண்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்றுடன் திரையரங்கில் 25 நாட்களை தி லெஜண்ட் திரைப்படம் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.








