சென்னை சிட்லபாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெண்களுக்கான அரசு விடுதியை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் ஐந்து தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அங்கு தமிழ்நாடு சமூக நலவாழ்வு துறையின் கீழ் வேலை செய்யும் பெண்களுக்கான அரசு விடுதி சுமார் 22 கோடி திட்ட மதிப்பில் 466 படுக்கைகள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சேவை இல்லத்தில் உள்ள சமையலறை மற்றும் மாணவர் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பணிகள் நிறைவடையும் காலம், எத்தனை அறைகள் என்பதை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். மாற்று திறனாளி பெண்களுக்கு கீழ் தளத்தில் அறைகள் ஒதுக்குமாறும், பள்ளி கல்லூரி, தனியார் தங்கும் விடுதி முறையான அனுமதி பெற்று நடக்கிறதா என ஆய்வு செய்யவும் அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் இறயன்பு அறிவுறுத்தினார்.
– இரா.நம்பிராஜன்