123 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்!

லாஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில், கிரிக்கெட் போட்டியை சேர்க்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள்…

லாஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில், கிரிக்கெட் போட்டியை சேர்க்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.  கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது.  அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் ஒலிம்பிக்கில் கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சிக்கு ஒரு வழியாக வெற்றி கிடைத்துள்ளது.

மும்பையில் தாமஸ் பாக் தலைமையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கிரிக்கெட் T20, பேஸ்பால், சாப்ட்பால், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 விளையாட்டுக்களை 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.