சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!

சென்னையில் 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  குறிப்பாக…

சென்னையில் 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது.

தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  குறிப்பாக சென்னை,  கோவை,  ஈரோடு,  விருதுநகர்,  நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:  71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சி.எம்.கே பிராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ட்ரினிவியா நிறுவனம், கிரீன் பீல்ட் நிறுவனம், எல்லன் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னையில் கீழ்ப்பாக்கம்,  அமைந்தகரை,  எழும்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.  இந்த நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்று (ஜன.5) இரவு நிறைவடைந்தது.  வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.