காவலர் எனக்கூறி ரூ. 20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட  5 பேர் கைது!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் போலீஸ் எனக்கூறி ரூ. 20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட  5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர்  சிராஜ். சென்னை கடற்கரை ரயில்…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் போலீஸ் எனக்கூறி ரூ. 20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட  5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர்  சிராஜ். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் வந்து கொண்டிருந்த சிராஜிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் போலீஸ் என கூறி, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்வதாக 20 லட்சம் ரூபாயை  பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து  எழும்பூர் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் போது, அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தது விசாரணை நடத்தியதில்  இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை வடக்கு கடற்கரை ரயில் நிலையத்திலேயே கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக விழுப்புரத்தைச் சேர்ந்த பாலசந்திரன், பிரகாஷ், சதீஷ், சிவா, தமிழ் ஆகியோரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.