அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்ற சட்டம் தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம் என்று தெரிவித்தார்.

அதே போல பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நடைமுறைபடுத்தப் பட்டது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என்று கூறினார்.

இவ்விரு சட்டங்களையும் நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.