தடையை மீறி போச்சம்பள்ளியில் ஆட்டுச்சந்தை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை வளாகத்திற்குள் வியாபரம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இன்று தடையை மீறி ஆட்டுச்சந்தைக் கூடியது.
கடந்த 4 வாரங்களாக போச்சம்பள்ளி வாரச்சந்தை கூடி வரும் நிலையில், போச்சம் பள்ளி மற்றும் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மூலம் வளாகத்திற்குள் சந்தை கூடுவதற்குத் தடை செய்யப்பட்டிருப்பதாக ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தடையை மீறி வாரச்சந்தை வளாகத்திற்குள், ஆட்டுசந்தை இன்று கூடிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக, கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் ஆட்டுச்சந்தை பகுதி நெரிசலுடன் காணப்பட்டது. அதேபோல் காய்கறி விற்பனை செய்ய சந்தை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாததால் வியாபாரிகள் திருப்பத்தூர் சாலை மற்றும் சந்தூர் சாலைகளில் கடைகளை வைத்துள்ளனர்.
தடையை மீறி ஆட்டுச்சந்தை கூடியது குறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
முருகனிடம் கேட்டபோது, எவ்வளவு சொன்னாலும் பொதுமக்கள் கேட்க மறுக்கிறார்கள், நாங்க என்ன செய்ய முடியும்? என தெரிவித்தார்.








