கே.என்.நேரு வீட்டில் 170 ஆவணங்கள் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 17ஒ ஆவணங்கள் ம் அற்றும் 13 மின்னனு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, நகராட்சித்துறையில் உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த -ஆம் தேதி கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 25 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ர சோதனைக்குப் பிறகு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கே.என். நேரு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அமலாக்கத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கம் (DVAC) தலைமையகத்தில் 02/2026 என்ற குற்ற எண்களின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024–2025-ஆம் ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத் துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவிப் பொறியாளர் (AE), இளநிலைப் பொறியாளர் (JE), துப்புரவு ஆய்வாளர், வரைவாளர் போன்ற 2,538 பணியிடங்களுக்குத் தகுதியற்ற நபர்களிடம் இருந்து பெருந்தொகை லஞ்சமாகப் பெறப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையின் மூலம் சட்டவிரோதமாகப் கைமாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் முடிவில், வழக்கு தொடர்பான 170 முக்கிய ஆவணங்களும், 13 மின்னணு சாதனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.