கொடைக்கானல் பில்லர் ராக்ஸ் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக யானை உருவ சிலைகள் அமைக்கும் பணி வனத்துறையினரால் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் பல சுற்றுலா இடங்கள் வனப்பகுதியில் உள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மோயர் பாயிண்ட் பகுதியில் காட்டெருமை உருவம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பலர் செல்பி, புகைப்படம் எடுத்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் எனப்படும் துாண் பாறை பகுதியில் யானைகள் உருவம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த சிஜீ என்ற சிற்பி வடிவமைத்து வருகிறார். இதன்படி மூன்று பெரிய யானைகளும், இரண்டு குட்டி யானைகளும் வடிவமைக்கப்பட உள்ளன. இப்பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்படும் எனவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அனகா காளமேகன்






