கேரள மாநிலம் குருவாயூர் கோயில் உற்சவ திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு
ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற யானை பந்தயம் நடைபெற்றது. இந்த
பந்தயத்தில் கோகுல் யானை முதலிடம் பிடித்தது.
கேரளாவின் திருசூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உள்ளது. குருவாயூர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் தொடக்க நாளன்று யானைகள் ஓட்டப்பந்தயம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான யானைகள் ஓட்டப்பந்தயம் இன்று கோவில் முன்பு நடந்தது. மொத்தமாக 19 யானைகள் கலந்து கொண்டன. இதிலிருந்து ஐந்து யானைகளை தேர்வு செய்த தேவசம் போர்டு நிர்வாக குழு செந்தமராக்ஷன், தேவி, கோகுல்,கோபி கண்ணன் மற்றும் வலிய விசு ஆகிய ஐந்து யானைகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டன.
அண்மைச் செய்தி : “நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி
கிழக்கு நடையில் மஞ்சுளால் என்ற இடத்திலிருந்து கிழக்கு நடை கோபுர வாசல் வரை பந்தயம் நடைபெற்றது. இதில் கோகுல் முதலாவதாக வந்தது. முதல் பரிசு பெற்ற கோகுல் யானைக்கு குருவாயூரப்பனின் உற்சவத் திருமேனியும், திடம்பும் சுமந்து சீவேலி வலம் வரும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படும்.

இதனையும் படியுங்கள்: நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
அனைத்து மரியாதைகளும் இந்த யானைக்கே அளிக்கப்படும். யானைகள் ஓட்டப்பந்தயத்தை காண கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். கால்நடை டாக்டர்களும் பந்தயத்தில் பங்கேற்ற யானைகளை கண்காணித்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
– யாழன்







