சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் பத்து தல. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் பாதி, கன்னடத்தில் மஃடி திரைப்படத்தை இயக்கிய நார்த்தனை வைத்தே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இடம்பெறும் இரண்டாம் பாதி முழுவதும் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது.
இதையும் படியுங்கள் : மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களைக் கோருவதா? – மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இதனைத் தொடர்ந்து, இன்று சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், பத்து தல படத்தின் டீசரை பார்த்துள்ளதாகவும், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் சம்பவத்திற்கு ரெடியாகிவிடுங்கள் எனவும் ட்வீட் செய்திருந்தனர்.
Here’s the teaser of #PathuThala
🔗https://t.co/7vwAxbdpb6#Atman #SilambarasanTR #PathuThalaFromMarch30 @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @Gautham_Karthik @arrahman @nameis_krishna@menongautham @priya_Bshankar
— Silambarasan TR (@SilambarasanTR_) March 3, 2023
அதன்படி பத்துதல படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ”நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்” என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பத்து தல திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.







