“திமுக மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை… அதனால் பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளது” – எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு 5 ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி கடன் சுமை உயர்ந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா, டாக்டர் பா.சரவணன், மாங்குடி மகேந்திரன், பெரிய புள்ளான் என்ற செல்வம், மகேந்திரன், மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சுந்தர்.சி, இராம.ஸ்ரீனிவாசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதில் அதிமுக, பாஜக, அமமுக, பாமக, தமாக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரி வசூல்களிலும் ஊழல் செய்தது திமுக தான். ஊழல் செய்ததால் மேயர், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஊழல் செய்த அரசு தொடர வேண்டுமா? வரி வசூலை சுருட்டும் அரசு தேவையா? ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நகர் துறையில் ஊழல் நடந்துள்ளதை மத்திய அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஊழல் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி பச்சை கொடி காட்டி விட்டார்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்போம். ஸ்டாலின் என் மீது கடும் கோபத்தில் உள்ளார். அ.ராசா பேச்சு குறித்து நான் பேசியதால் என் மீது கொலை வெரியில் உள்ளார். அமைச்சர் மூர்த்தி புதிய டெக்னிக் கண்டுபிடித்து பதிவுத்துறையில் ஊழல் செய்துள்ளார். ஊழல் நிரூபணம் ஆனால் அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதை அமைச்சர் பி.டி.ஆர் பேசினார். அமைச்சர் பி.டி.ஆர் பேச்சு பொய் என்றால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பி.டி.ஆர் மீது நடவடிக்கைகள் எடுத்தால் இன்னும் பல உண்மை வெளிவரும். முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி வெளிநாடு சென்று ஊழல் பணத்தை முதலீடு செய்துள்ளனர். நாளை முதல் வாக்களிக்க உள்ள அரசு ஊழியர்கள் சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அரசு ஊழியர்களை காத்த அரசு அதிமுக அரசாக இருந்தது. கொரைனா காலகட்டத்தில் மக்களை அதிமுக காத்தது. விலைவாசி உயர்வை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்தனர். அண்ணா கண்ட கனவினை எம்ஜிஆர், ஜெயலலிதா நிறைவேற்றினார். நான் ஆட்சி பொறுப்பு ஏற்கும் பொது பல்வேறு பிரச்சினைகள் இருந்தது.

கொரோனா தொற்றை தடுப்பதில் முதல் மாநிலமாக அதிமுக அரசை பிரதமர் மோடி சுச்சி காட்டி பாராட்டினார். கொரைனா, புயல் காலகட்டத்திலும் அதிமுக அரசு மக்களை காத்தது. முதலமைச்சர் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவொரு திட்டமும் செய்யவில்லை என பச்சைப் பொய் சொல்லி வருகிறார். காங்கிரஸ் – திமுக கூட்டணியில் திமுக தமிழகத்திற்கு எந்தவொரு திட்டமும் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் மத்திய அரசு திட்டங்கள் தாராளமாக பெற்று தந்துள்ளது. திமுக அரசு மத்திய அரசுடன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அதனால் பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. திமுக அரசின் 5 ஆண்டுகளாக ஆட்சியில் திமுக என்ன செய்தது.

திமுக அரசு 5 ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி கடன் சுமை உயர்ந்துள்ளது. தமிழகத்தின் கடன் சுமை ஒவ்வொருவரின் தலை மீது வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் என்ன நடக்கிறது என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.