தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு, பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் தந்திரம் திமுகவுக்கு உள்ளது. தேர்தலின் போது திமுக 520 வாக்குறுதிகளை வெளியிட்டதில் 95 சதவீதம் நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறி வருகிறது. திமுகவிற்கு வாக்களித்துவிட்டு மக்கள் வேதனையில் உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு. முப்பதாயிரம் கோடியை காப்பாற்றவே திமுக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தமிழக மக்களின் உரிமைகளை காக்கவே அதிமுக போராடுகிறது. அதிமுகவை பொருத்தவரையில் மக்கள்தான் எஜமானர்கள்.
தமிழக மக்களின் எண்ணங்கள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும். அதிமுக பலம் வாய்ந்த கட்சி, வலிமைமிக்க கட்சி சட்டத்தின் ஆட்சியை நடத்திய கட்சி. மீண்டும் வெற்றி பெற்று நாடாளுமன்றத் குரல் கொடுக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
ரெண்டு கோடி தொண்டர்களில் உணர்வுகளை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முடிவு. இது பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடுத்த முடிவு உணர்வுகளில் பிரதிபலிக்கும் வகையில் எடுத்த முடிவு.
எடப்பாடி பழனிசாமி இன்னும் கருத்து சொல்லவில்லை என பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டால் அது அனைவரின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டது. ஒரு கட்சியில் தீர்மானம் நிறைவேற்றினால் அதுவே இறுதி முடிவு.
இவ்வாறு எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.







