நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மத்தியப்பிரதேசத்தைக் கொண்டு வருவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் சென்ற பிரதமர் மோடி குவாலியரில் ஜோதிராதித்ய ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :
காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர மோடி, 60 ஆண்டுகளாக அவர்கள் வளர்ச்சியை கொண்டு வரவில்லை என்று தெரிவித்தார். ஏழைகளின் உணர்வுகளுடன் எப்போதும் விளையாடுவதாகவும் கூறினார். இருப்பினும், பாரதிய ஜனதா அரசாங்கம், மாநிலத்தை ‘பிமாரு ராஜ்யத்திலிருந்து நாட்டின் முதல் பத்து மாநிலங்களுக்கு மாற்றியுள்ளது.
குவாலியரின் இந்த வரலாற்று நிலத்தை நான் வணங்குகிறேன். இந்த நிலம் தைரியம், பெருமை, இராணுவ மரியாதை, இசை யை குறிக்கிறது. குவாலியர் தேசத்திற்கு ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களை வழங்கியுள்ளது. குவாலியர்-சம்பல் நாட்டின் பாதுகாப்பிற்காக துணிச்சலான இதயங்களை வழங்கியுள்ளது. பிஜேபியின் கொள்கைகள் மற்றும் தலைமையை வடிவமைப்பதில் குவாலியர் கணிசமான பங்கை வகிக்கிறது” என்று அவர் கூறினார்.
இன்று மத்தியப் பிரதேசம் இரட்டை என்ஜின் அரசாங்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது, “இரட்டை இயந்திரம் என்பது மத்தியப் பிரதேசத்தில் இரட்டை வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டுகளில் எங்கள் அரசாங்கம் மாநிலத்தை ‘பிமாரு ராஜ்யத்திலிருந்து நாட்டின் முதல் பத்து மாநிலங்களுக்கு மாற்றியுள்ளது.
நாட்டின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இரட்டை எந்திரத்துக்கான உங்கள் ஒரு வாக்கு, மத்தியப் பிரதேசத்தை முதல் 3 இடத்துக்கு அழைத்துச் செல்லும்” என்று பிரதமர் மோடி கூறினார்.







