கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடத்தி நடத்தி வரும் செல்வகணபதி என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்…

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடத்தி நடத்தி வரும் செல்வகணபதி என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன் தினம் மாலை யாரும் எதிர்பாராத வகையில், பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியது. இதைக் கண்டதும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஒடினர்.

கொழுந்து விட்டு எரிந்த தீ, அருகில் இருந்த கடைக்கும் பரவியது. அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள்வெடித்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், கடைக்காரர் செல்வகணபதியின் தாய் வள்ளி, ஷாஆலம், காலித், பஷீர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அய்யாசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நாசர் என்பவர் உயிரிழந்தார். பட்டாசு கடை இடிபாடுகளில் இருந்து தனபால் (11) என்பவர் உடல் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.