ஜம்மு காஷ்மீரில் 2 தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் இன்று சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்.20ம் தேதி இரவு குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜம்மு&காஷ்மீர் பாரம்முல்லா பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் ஏற்கெனவே பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்களை ஜம்மு&காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று உள்ளூர் கடைக்காரரைக் கொலை செய்ய சென்றுகொண்டிருக்கும்போது பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
Killed #terrorist is hybrid type, identified as Javed Ah Wani of #Kulgam district and he has assisted terrorist Gulzar (who was killed on 20th Oct) in #killing of 2 labourers from #Bihar in #Wanpoh. He was on mission to target one shopkeeper in #Baramulla: IGP Kashmir https://t.co/dmYMkeUIQz
— Kashmir Zone Police (@KashmirPolice) October 28, 2021
அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதற்கான குண்டுகள், ஒரு வெடி குண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர் ஜாவேத் ஆ வானி என்றும், அவர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவர் பீகார் தொழிலாளர்களை கொன்ற குல்ஜார் எனும் தீவிரவாதிக்கு உதவியவர் என்றும் கூறப்படுகிறது.








