”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்து

இன்று நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் குளறுபடி ஏற்பட்டாலும் தேர்வு முறையாக நடைபெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த டிஎன்பிஎஸ்சி…

இன்று நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் குளறுபடி ஏற்பட்டாலும் தேர்வு முறையாக நடைபெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வின் பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறி உள்ளதாகவும், தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் பதிவு எண்கள் தவறாக இருந்தாகவும் இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியானதால் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்க தாமதமானதால் தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதுபோன்ற முதன்மை தேர்வுகளில் தமிழ்நாடு அரசு  மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மைச் செய்தி : ஓபிஎஸ் தாயாரின் மறைவு வருத்தமளிக்கிறது – இபிஎஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வின் வினாத்தாள் 50 சதவீதம் சுலபமாகவும் 50 சதவீதம் கடினமாக உள்ளதாக தெரிவித்தனர். இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி காரணமாக  நேரம் ஒத்தி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் முதலில் தேர்வு எழுதும் பொழுது குழப்பம் ஏற்பட்டதாக கூறினர். இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்வின் நேரம்  காலத்தாமாதமான காரணம் டிஎன்பிஎஸ்சி தேர்வின் மெத்தன போக்குதான் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.