மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த எம்.பி., பதவி காலியானது. இந்தப் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 24ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







