முக்கியச் செய்திகள் தமிழகம்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறது

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த உள்ளது.

அதே நேரத்தில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு, உறுதியாக உள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்:பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

Niruban Chakkaaravarthi

முகமது அலி ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Ezhilarasan

இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: கமல்ஹாசன்

Saravana