தருமபுரி அருகே முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர்கள் சதீஸ் சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. இருவரும் திருப்பூரில் பணிபுரிந்த நிலையில், சதீஷின் நண்பர் சின்னப்பபையனுக்கும் சங்கீதாவுக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட சங்கீதா கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, சின்னபையனுடன் கடந்த மாதம் 3-ஆம் தேதி தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சதீஸ் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அண்மைச் செய்தி: ‘இலங்கை மக்களுக்கு உதவ காவல்துறையினர் முன்வரவேண்டும் – டிஜிபி’
இதனையடுத்து போலீசார் சின்னபையன் மற்றும் சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொண்டு காவல்நிலையத்திற்கு வருமாறு கூறி உள்ளனர். இதனையடுத்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விசாரணையில் இருவரும் விஷம் அருந்திவிட்டு காவல் நிலையத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. இந்த முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








