தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு நன்றாக இருக்கிறது என்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் கன்னியாகுமாரிக்கு வருகை தந்தார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையில் அவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரண் பிரசாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சந்தீப் மிட்டலை வரவேற்றனர். பின்னர் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில் கடலோர பாதுகாப்பு பற்றி கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : சென்னையில் இருந்து புதுச்சேரி வந்தடைந்த முதல் சரக்கு கப்பல்!
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு மிகவும் நன்றாக இருப்பதாகவும், அனைத்தும் முழுமையான கட்டுபாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
– அனகா காளமேகன்







