முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமல் – அமைச்சர் செந்தில்பாலாஜி

senthil balaji

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமல்படுத்தப்படும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகிறது. விசைத்தறிக்கு 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்படுகிறது.

இதனையும் படியுங்கள்: நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

அதன்படி ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தபபடுகிறது. 2021ம் ஆண்டு திமுக அளித்த  தேர்தல் வாக்குறுதிப்படி 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படுகிறது.

கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டியது ஈரோடு இடைத்தேர்தலால் காரணமாக அரசாணை ஒத்திவைக்கப்பட்டது.

அண்மைச் செய்தி : “நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி

தற்போது முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை  மார்ச் 1ஆம் தேதி முன் தேதியிட்டு அறிவிக்கப்படுகிறது” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

EZHILARASAN D

மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

Jayasheeba

பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர்?- அண்ணாமலை

G SaravanaKumar