முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா

மேகதாது விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் அந்த உறுதி கிடைக்கும் வரை, தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் என்றும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒத்தி வைக் கப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மாநிலங்களவையில் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு பிரச்னையை எழுப்பினர். பெட்ரோலிய பொருட்கள் விலையுயர்வு, விவசாயிகள் பிரச்னைகளை எழுப்பினர். தி.மு.க தரப்பில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க அவை தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை, இதனால் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை நாளை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக, அவையில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். அந்த உறுதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி போராடுவோம்.

நேரமில்லா நேரத்தில் இந்த விவகாரத்தை முக்கியத்துவம் கொடுத்து நாளைய தினம் கேள்வி எழுப்ப உள்ளோம். அவையில், பிரதமர் அல்லது நீர்வளத்துறை அமைச்சர் யாரேனும் ஒருவர் மேகதாது விவகாரத்தில் அணை கட்டப்படாது என உறுதி அளிக்க வேண்டும்; மேகதாது விவகாரத்தில் சொல்வது ஒன்றும் செயல்படுத்துவதும் ஒன்றுமாக உள்ளது.

கொரோனா சூழல் குறித்த நிலையை அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் தனியாக ஒரு கூட்டம் நடத்தி பிரதமர் விளக்கம் கொடுப்பது ஏற்று கொள்ளமுடியாது. அவையின் கண்ணியம், மரபு மற்றும் பொறுப்புகளை அவையில்தான் விவாதிக்க வேண்டும். மத்திய அரசின் தவறுகளை மறக்கவே, அவைக்கு வெளியே கொரோனா தொடர்பான விளக்கம் கொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குரலுக்கு மதிப்பு கொடுக்காத மத்திய அரசு அவைக்கு வெளியே விளக்கம் கொடுக்க முயல்கிறார்கள்.

இவ்வாறு திருச்சி சிவா எம்.பி.தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

உதயநிதிக்கு நடிகை கெளதமி கண்டனம்!

Niruban Chakkaaravarthi

மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

Jeba Arul Robinson

விஜய் சொகுசு கார் வழக்கு: திடீர் திருப்பம்

Vandhana