முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு புகாரில், முழு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த எஸ்.பி.வேலு மணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், கணக்கு தணிக்கை அறிக்கை யில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் வெளியாகியிருப்பதாக தமிழ்நாடு அரசு அப்போது தெரிவித்தது. விசாரணைக்குப்பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, முழுமையாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கை அடுத்த மாதம் 2வது வாரத்திற்கும் ஒத்தி வைத்தது.








