“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் கடந்த மார்ச் மாதம்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்தது. இதில் தெலங்கானா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட 7 மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தனர். இது குறித்து விவரிக்க முன்னதாக பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் ஒதுக்க கோரி கடிதம் எழுதினார்.

இதையும் படியுங்கள் : “மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

இதனிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.கள் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் இது தொடர்பான பேச்சுகள் குறையத் தொடங்கின. இதற்கிடையே, நேற்று (ஜுன் 5)  எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பாக  மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!”  என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.