’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை…

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளதால் இந்த கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது உறுதியாகிறது என்றும், தேசிய அளவிலும் மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளி விவரங்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.