டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடரபாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும். எனது மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா, இவை அனைத்தையும் கடந்து உறுதியாக நின்று உண்மையைத் தானே பேச அனுமதித்ததற்கு வாழ்த்துகள்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.







