தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதனிடையே தங்கம் விலை நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்திருந்தது.
தொடர்ந்து நேற்று மாலையிலும் மீண்டும் விலை உயர்ந்துள்ள நிலையில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் மேலும் அதிகரித்தது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்றி தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




