அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க அதிமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை…

அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க அதிமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை 5 கட்டங்களில் அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுவதாகவும் விதிகளுக்கு புறம்பாகவும், கொரோனா பரவல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த முனுசாமி வழக்கு தொடுத்திருந்தார்.

 

தேர்தல் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மட்டுமே நடத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஒரே இடத்தில் கூடும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணா பேரவை செயலாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.