சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300…

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்களுடன் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த மாதம் மேலும் 2 பேரை கைது செய்தது. மேலும், சென்னை, திருவள்ளூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை முடிவில் விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மொபைல் போன் சிம் கார்டுகள், உள்ளிட்ட 7 டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.