தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது; ப. சிதம்பரம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை…

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் வாசிப்பு 1.50 மணிநேரம் வரை நீண்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சுகாதாரம், கல்விக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது, ஆரோக்கியமானது. பெண்களின் கல்வி இடை நிற்றலை போக்கும் விதமாக பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த பட்ஜெட்டின் மூலம் மத்திய அரசின் கடன் சுமையை விட அடுத்த ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமை மிக, மிக குறையும் என நம்பிக்கை எழுந்துள்ளது” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.