வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்; அமைச்சர் ரகுபதி

எங்களுக்கு எப்போதும் வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் தெரியும் என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர்நீதிமன்ற…

எங்களுக்கு எப்போதும் வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் தெரியும் என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதியின் மூலமாக இதற்கான பணிகள் நடைபெறும். கொரோனா, மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு தொடர்ச்சியான இடர்களால் நிதி நெருக்கடிகள் இருப்பினும் நிதியமைச்சர் தமிழகத்தின் கடன்சுமையை குறைத்துள்ளார். வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கனவே முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு எப்போதும் வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் தெரியும் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களுக்கு உடனிருந்தவர்கள் வழக்கறிஞர்கள். எங்கெங்கெல்லாம் நீதிமன்றங்கள் வேண்டுமோ, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமோ அவையெல்லாம் செய்து முடிக்கப்படும். மெடிக்கிளைம் திட்டத்தில் வழக்கறிஞர்களை இணைப்பது ஒரு பெரிய விஷயமல்ல. வழக்கறிஞர் மருத்துவக்காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மேலும் வழக்கறிஞர் நிதிகளை உயர்த்தித்தர போதிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.