தமிழ்நாடு பட்ஜெட் 2022-23: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901 கோடி

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள…

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும் எனக்கூறினார். காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை, 100 கோடி ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தப்படும் என அறிவித்த அவர்,

அண்மைச் செய்தி: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது – ப.சிதம்பரம்

உக்ரைனில் இருந்து தயாகம் திரும்பி தமிழ்நாடு மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவ படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதியளித்தார். மேலும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.