புதுச்சேரியில் மின்துறையைத் தனியார் மயமாக்க கூடாது எனவும் , ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தக்கூடாது எனவும் மின்துறை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி அரசு மின்துறையைத் தனியார் மயமாக்கத் திட்டமிட்டு வருகிறது .மேலும் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தி அதன் மூலம் ப்ரீ பெய்ட் மின் திட்டத்தை அமல்
படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது, இதற்கு
மின்துறை ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக
அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு மின்துறை , கோவா மாநிலம் மற்றும் யூனியன்
பிரதேசங்களுக்கான கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், 2023-24 நிதி
ஆண்டுக்கான கட்டண மனு மீதான விசாரணை மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதனையும் படியுங்கள்: வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் ஜோதி பிரசாத் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர். மேலும் மின்கட்டன உயர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் மின்துறையைத் தனியார் மயமாக்க கூடாது எனவும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
–ஆர்.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்