சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய கேண்டியன் அருகே கட்டுமான பணிகள் நடந்து…

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய கேண்டியன் அருகே கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த சென்னை விமான நிலைய போலீசார், இறந்த நிலையில் இருந்த உடலை ஆய்வு செய்ததில், உடலின் வெளியே காயங்கள் எதுவும் இல்லை என்பதால், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘மோடி மீண்டும் பிரதமராக முடியும் ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவராக ஆக முடியாது – எம்.பி. திருமாவளவன்’

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த நிலையில் இருந்தவர், கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் பிரி பெய்ட் டாக்ஸிகளை சுத்தம் செய்யும் பணி, டிராலிகளை தள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும், இவர் ரமேஷ் என்று அழைக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.

மேலும், ரமேஷ் குடிபோதைக்கு அடிமையானவா் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், மது போதையில் உயிரிழந்தாரா? இல்லை வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் ரமேஷ் எப்படி இறந்தார் என்று தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் ரமேஷ் உறவினர்கள் இருப்பதாக கூறப்படுவதால், போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.