கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்படும். இதன் காரணமாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 போன்ற அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முள்ளங்கிகினாவிளை – 48.2 மில்லி மீட்டரும், இரணியல் – 33 மிமீ, அடையாமடை – 29 மிமீ,  பேச்சிப்பாறை – 28.4 மிமீ, சிற்றார்.1 – 26மிமீ, கோழிப்போர்விளை – 26 மிமீ,  சிவலோகம் – 25.6 மிமீ, குருந்தன்கோடு – 25.6 மிமீ,  குளச்சல் – 24.2மிமீ,  திற்பரப்பு – 23.2 மிமீ, மாம்பழத்துறையாறு – 13 மிமீ, ஆனைகிடங்கு – 11.2 மிமீ, புத்தன் அணை – 11 மிமீ, பெருஞ்சாணி – 10.4 மில்லி மீட்டரும் மழைப்பெய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.