மோடி மீண்டும் பிரதமராக முடியும் ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆக முடியாது – எம்.பி. திருமாவளவன்

மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில், மோடி மீண்டும் பிரதமராக முடியும் ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவராக ஆக முடியாது என எம்.பி. திருமாவளவன் தெரிவித்தார். மதுரையில்…

மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில், மோடி மீண்டும் பிரதமராக முடியும் ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவராக ஆக முடியாது என எம்.பி. திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு முன்னதாக செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பறையிசை உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.பி. தொல். திருமாவளவன், ஆதீன மடத்தில் எந்த ஒரு பிராமணரும் ஆதீனமாக வர முடியாது எனவும், இனக்கலப்பு படையெடுப்பு உள்ளிட்டவைகளால் ஆரியமும் திராவிடர்களும் கலப்பு ஏற்பட்டு தற்போதைய இந்தியா உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியா முழுவதும் திராவிடர்கள் இருந்தார்கள், அவர்கள் வர்ணாசர்ம தர்மத்தையும் பார்பனியத்தையும் எதிர்த்தவர்கள் தான் என குறிப்பிட்ட அவர், வர்ணம் ஜாதிகளின் தொகுப்பு, வர்க்கம் என்பது உழைக்கும் மக்கள் குறிப்பது, மற்றொன்று உழைப்பாளர்களை சுரண்டும் ஆதிக்க வர்க்கம். இந்த ஆதிக்கத்தையும், சுரண்டலையும் எதிர்க்க போராடியவர்கள்தான் அம்பேத்கர் மற்றும் பெரியார் என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி; பரிசு கோப்பையை வென்றது ஹரியானா’

தொடர்ந்து பேசிய அவர், இராமாயணத்தில் சூத்திரரான சம்புவன் தவம் செய்ததால் ராமன் சம்புவன் தலையை வெட்டினான். சம்புவன் இந்த காலத்தில் எம்பிசி பிரிவை சேர்ந்தவன் என தெரிவித்த அவர், எதிர்ப்பவர்கள் – எவ்வளவு திறமை கொண்டவனாக இருந்தாலும், வஞ்சகத்தால் நட்பு பாராட்டி வலைப்பது பார்ப்பனியம் என குற்றம்சாட்டினார். அமித்ஷாவும், மோடியும் பிராமணர்கள் கிடையாது. ஆனால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற பார்ப்பனிய இயக்கத்தின் பணியாட்கள் என தெரிவித்தார்.

மோகன் பகவத், சாவர்க்கர்கள் சித் பவன் பிரிவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் மீண்டும் தலைவர்கள் ஆவார்கள் என தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமராக முடியும் ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவராக ஆக முடியாது என கூறினார். மனுதர்மம் தான் சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்தியது.

படித்தால் சூத்திரர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது என தெரிவித்த அவர், ராமதாஸ் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சூத்திரருக்குதான் கோபம் வரனும். ஆனால், அவர்கள் தங்களை சத்திரியர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.