முக்கியச் செய்திகள் இந்தியா

கடும் பனிமூட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டித்து டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லியில் நிலவும் கடும் அடர் பனிமூட்டம் காரணமாக பள்ளிகள் வரும் 15ம் தேதி திறக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் அடர் மூடுபனி மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை போக்குவரத்து, விமானசேவை, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியாவையும் அதை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளையும் அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்துகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாலைகளில் எதிரே வரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டாலும் தெரியாத அளவுக்கு கடுமையான மூடுபனி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. காலை வெகுநேரமானாலும் மூடுபனி காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர்.

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மூடுபனி நிலவி வருகிறது. இதற்கிடையில் டெல்லி, பஞ்சாப், ஹரியான, சண்டிகர், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு கடும் அடர்பனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ம் தேதி வரை தனியார் பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேப்போல, வரும் 14ம் தேதி வரை எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஜார்கண்ட் அரசும், 8ம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுவதாக உத்தர பிரதேச அரசும் அறிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசிரியர் பற்றாக்குறை – தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்?

Dinesh A

தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

G SaravanaKumar

உத்தராகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 என பதிவு

Halley Karthik