“2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் காக்கும் திட்டங்களும் – கழகத்தின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது!

இனி, நாம் மிக கவனமாக ஆற்ற வேண்டிய பணி – ‘பூத்’ அளவில் பாஜக பிற மாநிலங்களில் செய்யும் #VoteTheft, #SIR போன்ற அட்டூழியங்கள் நடைபெறாமல் தடுப்பதுதான்! அதற்கு, நம் BLC-களை வலுப்படுத்துவோம்!

2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது! செல்வோம், வெல்வோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.