திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இதில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2026ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெறும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெற உள்ளது.
இதன்னையொட்டி விருதுகள் வெறுவேரின் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி,
பெரியார் விருது – விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
அண்ணா விருது – சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்
கலைஞர் விருது – கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
பாவேந்தர் விருது – கழக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
பேராசிரியர் விருது – தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது – இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா
ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




