தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில திங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று காலை சற்று அதிகரித்த தங்கம் விலை மாலையில் சரிந்தது. அதன்படி நேற்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1680 குறைந்து ரூ.113,400-க்கு விற்பனைசெய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலை வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.250,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




