முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் 15 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் தினமும் 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ள நிலையில், 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று (18-12-21) நடக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

50 ஆயிரம் மையங்களில் நடக்கும் இந்த முகாம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சென்னையில் 1600 இடங்களில் தடுப்பூசி

சென்னையில் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

G SaravanaKumar

ஆந்திராவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

Halley Karthik

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்!

Jayapriya