“லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி..” – முதலமைச்சர் #MKStalin பதிவு!

லைட்டர்கள் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்ததற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்-க்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட்…

“Thanks to Central Govt for banning import of lighter parts..” - Chief Minister #MKStalin post!

லைட்டர்கள் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்ததற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்-க்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களாய் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இருக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில்,

“கடந்த ஆண்டு எனது கடிதத்தில் கோரியபடி, எங்கள் கவலைகளுக்கு செவிசாய்த்து, பாக்கெட் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி. இந்த முடிவு தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்-க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தமிழ்நாட்டின் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலுப்பெறுவதுடன், சுமார் ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குறையும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.