#T20W | பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்!

பாகிஸ்தானுக்கு எதிரான ‘டி-20’ மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு…

#T20W | New Zealand beat Pakistan to advance to the semi-finals!

பாகிஸ்தானுக்கு எதிரான ‘டி-20’ மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்தது.

பின்னர், 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது அத்துடன், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனிடையே, கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் அரைஇறுதி வரை முன்னேறி இருந்த இந்திய மகளிர் அணி இந்த முறையும் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.