தாய்லாந்து ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு!

தாய்லாந்தில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு சென்ற ரயிலில் 195 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த ரயில் பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்துள்ளது.

அப்போது ரயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரயிலில் ஒரு பெட்டியின் மீது விழுந்துள்ளது. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தி ரயில் தீ பிடித்து எறிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.