கண்டிப்பாக வாரிசு படம் பார்ப்பேன். விஜய் சார் படம் மிஸ் பண்ண மாட்டேன் என துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி உள்ளது துணிவு படம். போனி கபூரின் குறைவான பட்ஜட்டில் எந்த அளவிற்குப் படத்தை முழுமையாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இயக்கி உள்ளார் வினோத். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் நமது நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் துணிவு படம் குறித்தும் துணிவு படத்திற்கான பாடல் உருவாக்கம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டி:
நம்ப correct ஆ exam எழுதிட்டோம் அத நம்ம முன்னாடி திருத்துற மாதிரி இருந்தது. முடியும் போது பாஸ் ஆகிட்டோம் என்ற feel இருந்தது. டான்ஸ் பாட்டு ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணோம் அது எல்லாம் reflect ஆச்சு. Silent விட்டு இருந்தோம் அது சரியா workout ஆச்சு.Silent ஒரு weapon அது சரியா கொடுத்த ஒரு பூதாகரமாக விஷயம். கமல் சார், ராஜா சார் பார்த்து கற்றுக்கொண்டது. அஜித் மாஸ்க் எடுக்கும் காட்சிக்கு நாங்கள் நிறைய மியூசிக் போட்டோம் எதுவும் set ஆகல அதனால் silent வச்சோம் என தெரிவித்தார்.
அத்துடன், நிறைய தப்பு பண்ணி தான் அந்த மாஸ்க் காட்சிக்கு மியூசிக் போட்டோம்.கொஞ்சம் pressure இருந்தது. அதிலிருந்து உடனே வேளையில் உட்கார முடியவில்லை. அந்த pressure எடுத்து வைத்து பிறகு தான் செய்ய முடிந்தது. வினோத் இந்த மாதிரி வேணும் என strict ஆ கேட்க மாட்டார். Regular ஆன instruments வேண்டாம் என்பார். அஜித் சாருக்கான அந்த image அத மேட்ச் பண்ணனும் அதற்காக கொடுக்க வேண்டும் என எனக்குள் இருந்தது என கூறினார்.
மேலும், Pressure போன பிறகு கொஞ்சம் தைரியமாக செய்யலாம் என 80, 90 களில் பயன்படுத்திய கிட்டார், பியானோ பயன்படுத்தினோம். Robery பண்ற படம் என்பதால் பழைய cowboy படங்களில் பயன்படுத்திய instrument use பண்ணோம். நேரடியாக பேசவில்லை. அஜித் சார் பிடிச்சி இருப்பதாக சொன்னார். அஜித் சாரை பாட வைக்க முயற்சி செய்தோம். ஆனால் அதிக வேலை காரணமாக அதை செய்ய முடியவில்லை. கேங்ஸ்டா பாடலை அஜித் சாரை வைத்து பாட வைக்க வேண்டும் என நினைத்தேன்.படத்தில் இருக்கும் ஆக்ஷனை reflect செய்ய வேண்டும் என கேங்ஸ்டா பாடலை அங்கு வைத்ததாக கூறினார்.
அத்துடன், வலிமையை பொறுத்தவரை யுவன் பிஸியாக இருந்தாரா இல்லையா அந்த பக்கம் நான் போனதில்லை. எனக்கு எல்லா படமும் equal தான்.
வலிமை வரும் பொது அதற்கு சரியான justice கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அது எனக்கு மிகப்பெரிய opportunity. துணிவு கதை சொல்லும் போது இரண்டு பாகமாக தான் ஸ்கிரிப்ட் இருந்தது. மியூசிக்கையும் இரண்டாக பண்ண வேண்டும் என்று தான் வினோத் வைத்திருந்தார். என் அம்மா நண்பர்கள் எல்லாம் பார்த்து விட்டு இரண்டாம் பாதி பிடிச்சிருந்தது என்றார்கள்.ரசிகர்களுக்கு மட்டும் அல்ல எனக்கு அந்த Pressure இருந்தது. இப்போ அந்த மியூசிக் தியேட்டரில் பார்க்கும் போது அதை பிடிச்சு ringtone ஆக வைக்கிறார்கள் என்ற level க்கு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், Original soundtrack நிறைய இருக்கு. குட்டி குட்டி சாங் இருக்கு. அடுத்து அடுத்து வெளியாகும். Underrated என்பது தொடக்கத்தில் அப்படியா என்று இருந்தது. அதன் பிறகு நல்ல படம், இயக்குனர் படம் என்று தான் இருந்தது. 3, 4 வது படமாக துணிவு வந்து இருந்தால் மற்ற இயக்குனர்களுக்கு, நடிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கும். எனக்கு வேலை இருந்து கொண்டே உள்ளது. வித்தியாசமான கதைகள் வந்து கொண்டே உள்ளது. இந்த மாதிரியான போர்ட்ஃபோலியோ மற்ற கம்போசர்களுக்கு இல்லை என கூரினார்.
அத்துடன், நீங்க தான் இந்த பாட்டு பண்ணது என்று எனக்கு தெரியாது என சிலர் சொல்லி உள்ளனர். இயக்குனர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் அவ்வளவு தான். அவர்களுக்கு தெரிந்தால் போதும். அன்பை பரப்புபவர் அதான் ஜிப்ரான் என்ற பெயரின் அர்த்தம். என்னுடைய உண்மையான பெயர் விஜய். வாகை சூடவா படத்தின் போது என்னுடைய பெயரை மாற்றி கொண்டேன். விஜய் என்ற பெயர் நிறைய used ஆக உள்ளது. அதனால் தனித்துவமாக இருக்க வேண்டும் ஜிப்ரான் என்ற பெயர் எனக்கு பிடித்து இருந்தது. நிறைய connect உள்ளது. இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், Views அந்த பிம்பம் எனக்கு நிறைய நாட்களுக்கு முன்பே break ஆகி விட்டது. Views, likes, comments நீங்கள் வாங்க முடியும். யூடியூப் வந்த புதிதில் எனக்கு அந்த கிக் இருந்தது. ஆனால் அது எனக்கு தெரிந்த பிறகு மாறி விட்டது. தமன் பண்ண ரஞ்சிதமே பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அது இவ்வளவு ரீச் ஆகும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ரஞ்சிதமே, சில்லா சில்லா ringtone ஆக வைக்கும் போது இது இரண்டு பேருக்குமே தேவையான விஷயம் என கூறினார்.
குறிப்பாக, தல்லால தல்லால என்ற வரிகள் தெரிந்து தான் பாடலில் வைக்கப்பட்டதா ? என கேட்டதற்கு No Comments என்று சிரித்தார். மேலும், சில்லா சில்லா பாடல் அனிருத் தான் பாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. ஒரு பாடல் முடித்த பிறகு ஒரு சிங்கர் வாய்ஸ் கேட்கும் எனக்கு அனிருத் வாய்ஸ் தான் கெட்டது.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நேர் கொண்ட பார்வைக்கு பிறகு அஜித் சாரை நான் பார்க்கவில்லை. 2, 3 முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இயக்குனர் எனக்கு வேலை கொடுத்து விட்டார் என கூறினார்.
மேலும், 100 ஆண்டு பழமையான பியானோ ஒன்று வைத்துள்ளேன். வேலை செய்கிறது. அந்த இசை கேட்டு நான் மெய் மறந்து உள்ளேன். பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது நல்ல பாட்டு பாட மாட்டேன். அடுத்து நிறைய படங்கள் பண்ணி கொண்டு இருந்தாலும் யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை. அஜித் சார் மேல் இருந்த மரியாதை காரணமாக அவர்களின் பாடல் பதிவுகளை தள்ளி வைத்தனர். அவர்கள் அன்பு காட்டி விட்டனர். நான் அவர்களுக்கு திருப்பு அன்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், வாழக்கை ரொம்ப முக்கியம். அதிலும் தனிப்பட்ட வாழ்க்கையை சிறப்பாக பார்த்து கொண்டால் மற்றது எல்லாம் சரியாக அமையும். சில இயக்குனர்கள் தான் என்னை வருத்தப்பட வைப்பார்கள். வினோத்துக்கும் எனக்கு நிறைய சண்டைகள் நடக்கும் வினோத் மட்டும் அல்ல நிறைய இயக்குனர்கள் உடன் சண்டை நடக்கும். படம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அந்த சண்டை இருக்கும் என கூறினார்.
அத்துடன், நான் சொல்வது தான் சரி என சொல்லும் போது தான் சண்டை வரும். அல்லது ego இருக்கும். அந்த மாதிரி இருந்தாள் அந்த படத்தை விட்டு வெளியே வந்து விடுவேன். Hit வேண்டும் என்று சொன்னால் தான் pressure ஆகும். இந்த பாடல் hit ஆச்சு இந்த மாதிரி ஒரு பாடல் பண்ணலாம். Hit பாடல் நீங்கள் உருவாக்க முடியாது. கண்டிப்பாக வாரிசு படம் பார்ப்பேன். விஜய் சார் படம் மிஸ் பண்ண மாட்டேன். தமனுக்காக கண்டிப்பாக பார்ப்பேன் எனவும் ஜிப்ரான் பேசினார்.







