”சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க நானே பரிந்துரைக்கிறேன்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க நானே தலைமைக் கழகத்திற்கு பரிந்துரைக்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் உள்ள மருத்துவ பணியாளர்களோடு மருத்துவம் மற்றும்…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க நானே தலைமைக் கழகத்திற்கு பரிந்துரைக்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் உள்ள மருத்துவ பணியாளர்களோடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் வைத்து கொண்டாடினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களுக்கும் புத்தாடைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஒருங்கிணைந்து நடத்திய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களோடு பொங்கல் விழாவை கொண்டாடுவது பெருமை மிகுந்த ஒன்றாக இருக்கிறது.

பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுவது போன்ற அநாகரிக செயலை திமுக ஒருபோதும் அனுமதிக்காது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் பேசத் தொடங்கிய பத்து நிமிடங்களில் அவரது பேச்சின் போக்கை கண்டு தடுத்து நிறுத்தப்பட்டது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க நானே தலைமைக் கழகத்திற்கு பரிந்துரைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.